தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைந்து வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து பெண்களும் இந்த திட்டத்தில் பயன் அடைந்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பெண்களுக்கு இலவச டிக்கெட் என்பதால் அவர்களை பேருந்தில் ஏற்ற மறுக்கின்றனர்.

ஒரு சில பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இலவச டிக்கெட் என்பதை காரணம் காட்டி பெண்களை அவமரியாதையாக நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் இலவச பேருந்து திட்டத்தின் கீழ் பெண்களை பேருந்தில் ஏற்றம் இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.