இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர் உடன் இணைந்து கொரோனா காலத்தில் கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசிக்கு உரிமம் பெறுவதற்காக 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை சோதித்ததாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே தடுப்பூசியை தயாரித்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதால் அதை நினைத்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.