இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் ஜனவரி மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு குறித்த செய்தியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலுக்கு முன்பாக அகல விலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதத்திற்கான அகல விலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 16 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வரும் நிலையில் ஜனவரி மாதத்திற்கான அகல விலைப்படி உயர்வு எப்போது என்பது குறித்து ஊழியர்கள் கடும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.