தமிழக மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 9 மாதங்களில் விதியை மீறி செயல்பட்டு வந்த 219 மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 381 மறந்து விற்பனையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்து வந்த 11 மருந்து விற்பனை உரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.