
செய்தியாளர்களிளிடம் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, உங்களுக்கு அது செய்றேன்…. இது செய்றேன்னு…. நீங்க கொஞ்சம் பாருங்க… நாடாளுமன்ற தேர்தல் வந்த உடனே பாருங்க. புயல், காற்று, வெள்ளம் என்றால் யாரையும் பார்க்க முடியாது. திமுககாரங்களை பார்க்கவே முடியாது… ஆனால் தேர்தல் வந்துருச்சுன்னா…. உங்க தெருவுக்கு தெரு வந்து உட்கார்ந்திட்டு என்ன பண்ணுவாங்க தெரியுமா ? நம்ப அத செஞ்சுருவோம்… இதை செஞ்சுருவோம்… நீங்க கரெக்டா போடுங்க…. நீங்க இப்ப போட்டுடீங்கன்னா….
மத்தியில நாலு, அஞ்சு மந்திரி வந்துருவாங்க. எல்லாத்தையும் சரி பண்ணிடுவாங்க, அப்படின்னு சொல்லுவாங்க… நம்ம தமிழ்நாட்டு மக்கள் ஏமாறாமல் இருக்கணும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள். பொங்கல் பரிசு தொகுப்பு எல்லாருக்குமா இருக்காது. அவங்க கட்சிகாரங்களுக்காக இருக்கும். உண்மைதான். அது கிடைக்கல தான். அது மட்டும் இல்லை, புயல் நிவாரணமும் சரியா யாருக்கும் போய் கிடைக்கலைன்னு சொல்றாங்க… பொங்கல் தொகுப்பு வாங்கியாச்சின்னு மெசேஜ் மட்டும் தான் வரும்.
திமுக அரசாங்கத்திலே மெசேஜ் மட்டும் தான் வரும். அது கூட நான் சொல்றேன்… அதுலயும் ஒரு சுயநலம் இருக்கு. ஏன் சொல்றேன் அப்படின்னா…. மெசேஜ் வந்தது இல்ல உங்க நம்பருக்கு…. அந்த நம்பர் எல்லாம் அப்படியே நோட் பண்ணி வச்சிப்பிங்க… இவ்வளவு பேருக்கு கொடுத்தாச்சு… அவங்களுக்கெல்லாம் போய் கரெக்டா சேந்துடுச்சு அப்படின்னு சொல்லி வச்சுருவாங்க…. ஏன்னா ஒவ்வொரு வருஷமும் சென்ட்ரல் ஆடிட் வரும். அப்போ அதை தூக்கி காமிச்சிடலாம். காமிச்சுட்டா எல்லாருக்கும் தான் கொடுத்தாச்சு… கரெக்டா பர்பெக்டா இருக்கு கணக்கு அப்படின்னு சொல்லிட்டு போயிருவாங்க என தெரிவித்தார்.