திமுக மாநாட்டில் கலைஞரின் பேணா என்ற தலைப்பில் பேசிய கரு. பழனியப்பன்,  இந்த மாநாடு எவ்வளவு பெரிய வெற்றி என்றால்,  சேலத்தில் இருந்து இந்த மாநாட்டிற்கு கிட்டத்தட்ட 4:30 மணி நேரம் பயணம் பண்ணி வந்து சேர்ந்திருக்கேன்.  காலையில் கிளம்பி மதியம் வந்துள்ளேன்.  அதுதான் இந்த மாநாட்டுக்கு மிகப்பெரிய வெற்றின்னு நினைக்கிறேன்.  நேற்று நேர் அண்ணன் பேசிட்டு இருக்கும்போது பேட்டியில் சொன்னாங்க…    மிகப்பெரிய பந்தல் அமைச்சி இருக்கோம்.

உள்ளுக்குள்ள 2 1/2 லட்சம் பேர் இருப்பாங் என சொன்னாங்க. நேரு அண்ணன் பேட்டியை நீங்கள் பார்த்தீங்களா எனக்கு தெரியல. உள்ளுக்குள்ள 2 1/2 லட்சம் பேர் உட்கார முடியும். வெளியிலிருந்து 2.5 லட்சம் பேர் கேட்க முடியும் என சொன்னாரு.  நேரு அண்ணன் கடைசி வரைக்கும் சொல்லல…  ஹைவேல ஒரு 2 1/2 லட்சம் பேர் இருப்பாங்க. அவங்கள கடந்து தான் நீங்க வரணும்னு சொல்லல….  அவ்வளவு தடுமாறி நான் இங்கு வந்து சேர்ந்தேன்.

எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ரொம்ப மகிழ்ச்சிகரமான ஒரு தலைப்பு. ஏன்னா இங்கே கலைஞரோடு இருந்த மூத்த தலைவர்கள் எல்லோரும் நிறைந்து இருக்கின்ற இந்த அவையில்,  கலைஞரோடு நான் அதிக நேரம் இருந்தேனா…. நீ அதிக நேரம் இருந்தியான்னு… டி.ஆர் பாலுவுக்கும்,  துரைமுருகன் அண்ணனுக்கும் ஒரு பெரிய வாக்குவாதமே ஏற்படலாம். ஆனால் இவர்கள் எல்லோரையும் விட கலைஞரோடு அதிக நேரம் இருந்த அவருடைய பேனாவைப் பற்றிய பேச வாய்ப்பு கிடைத்தது தான் எனக்கு பெரிய மகிழ்ச்சி என தெரிவித்தார்.