செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  செவ்வாய் கிரகம் மாதிரி பார்த்தீர்கள் என்றால்…. அந்த அளவிற்கு எனக்கு செவ்வாய் கிரகத்தில்  குண்டும் குழியுமாக இருக்கின்ற மாதிரி சாலைகள் இருக்கு… உடல் ரீதியாக பாதிப்பு வரக்கூடிய அளவில் தான்  சாலைகள் இருக்கின்றது. இந்த சாலையில் போனால் அவ்வளவு தான்… அடுத்த வேலை பார்க்க முடியாது….  உடம்பு வலியில் படுத்துக் கொள்வார்கள்…

பெரிய பள்ளங்கள் மழையில்  தெரிவதில்லை. மழை நீர் தேங்கி இருக்கிறது. அதில் விழுந்து டூவீலர் எல்லாம் ஆக்சிடென்ட்…அங்கங்கே பள்ளம் தோண்டி வச்சுட்டு.. வேறு பேரிகார்ட் மட்டும் போட்டு இருக்காங்க…எங்க பள்ளம் இருக்குன்னு தெரியவில்லை. இந்த துப்புக்கெட்ட அரசுக்கு ரோடு போட வக்கில்லை. ஆனால்  நல்லா இருக்கின்ற சாலையை நொண்டி போட்டு…

42 கோடி செலவு பண்ணி கார் ரேஸ் யாருக்கு தேவை ?  மக்களின் வரிப்பணத்தை எப்படி வேணாலும் செலவு பண்ணலாமா ? ஒரு ரூபாய் வரி கட்டி மக்கள் அரசுக்கு கஜானாவில் செலுத்துகிறார்கள் என்றால், அவனுக்கு  நல்ல விஷயத்திற்கு போக வேண்டும்…  ஹாஸ்பிடல் கட்டுங்கள், ஸ்கூல் கட்டுங்கள், பில்டிங் கட்டுங்கள்… பல்வேறு விதமான மக்களுக்கு பயன்பெறும் வகையில் பணம் போகவேண்டும்.. சும்மா  சிலை வைப்பது….  அப்பா புகழ் பாடுவது….  பார்முலா ரேஸ் கோட்னு வருவது….

இந்த மாதிரி விஷயங்கள் முழுமையாக தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்……  முற்றுப்புள்ளி கண்டிப்பாக 2024 பாராளுமன்ற தேர்தலில்…..  கண்டிப்பாக திமுகவிற்கு பெரிய பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள்… மக்கள்தான் இறுதி எஜமானர்கள்…. நீங்கள் எது வேணாலும் செய்து கொண்டு போகலாம்….  ஆட்சியில் இருக்கின்ற அதிகார தோரணையில்….  எது வேணாலும் செய்யலாம்…..  இறுதி எஜமான் மக்கள்…. மக்களை  பொருத்தவரை எல்லாத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். முற்றுப்புள்ளி வைப்பார்கள்..கார் ரேஸ் நடத்துங்கள்…  நடத்துவதை போய்க்கொண்டு இருங்காட்டு கோட்டை அல்லது சோழவர்துல நடத்துங்கள். யாருக்கும் பிரச்சினை இல்லை என தெரிவித்தார்.