செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று புதிய நிதி கட்சியும் விரும்புகிறது,  வேண்டுகோளாக வைக்கிறது… நடைபெற இருக்கின்ற தேர்தலில் பாரத பிரதமர் யார் என்பது தான் முக்கியமே தவிர,  நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. இதற்கு முன்பு எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்…

கிட்டத்தட்ட 17,  18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள்,  சென்றிருக்கிறார்கள்….  அது எல்லாம் கணக்கில் வராது. யார் வெற்றிகரமாக பல திட்டங்களை கொண்டு வந்து சேர்க்கிறார்களோ…..   அந்த பாராளுமன்ற உறுப்பினர் தான் வலுவான பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுபவரை தவிர,  வந்தார்கள்….

போனார்கள் என்ற நிலைமை இல்லாமல்,  யார் வெற்றி பெற்றால் ? யாருடைய ஆட்சி அமைத்தால் ? இந்த வேலூர் பாராளுமன்றத்திற்கு…. வேலூர் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ,  திட்டங்கள் வருமோ அதை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.நடைபெற இருப்பது நாடாளுமன்ற தேர்தல். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

வேலூரிலே AC சண்முகம் சொல்கின்றேன்…  நாட்டின் பிரதமராக மோடியை தவிர,  யாராலும் வெற்றி பெற முடியாது…. மோடியின் தலைமையிலே ஆட்சி நடைபெறும். அதை எந்த கொம்பனாலும் அதை தடுத்து விட முடியாது. தென் மாநிலங்களில் வேண்டுமானாலும் ஒரு சில வெற்றி,  தோல்விகள் இருக்கலாம். வடமாநிலங்களிலே மோடி அவர்கள் தெய்வம் போல காட்சி தந்திருக்கிறார்கள்.  வட மாநிலங்களை மிகப்பெரிய அளவில் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கட்டமைப்பு துறையிலும் சரி…. பொருளாதாரத் துறையிலும் சரி….

மத்திய அரசினுடைய திட்டங்களும் சரி….  சாலை வசதியும் சரி…. வந்தே பாரத் ரயில்களிலும் சரி….  இப்பொழுது உத்தரகாண்டில் குடைந்து கொண்டிருக்கிறார்களே, அதை போல  ஆயிரக்கணக்கான திட்டங்கள் வடமாநிலங்களில் சென்றடைகிறது….  வடமாநில மக்களுக்கு அயோத்தினுடைய ராமராக மோடி அவர்கள் தென்படுகிறார்கள். ஆகவே மோடி வெற்றி பெறுவதை தடுக்க எந்த சக்தியாலும் முடியாது. எந்த கொம்பனாலும் முடியாது. மக்கள் அவரை விரும்புகிறார்கள்,  அவர் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.