துவாரகா  குறித்தான கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், யார் வேண்டுமானாலும் எந்த படத்தை வேண்டுமானாலும் இன்னைக்கு youtube மூலமாகவோ AI சோசியல் மீடியாவில்  ரிலீஸ் பண்ணலாம். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது. எங்களுடைய நிலைப்பாடு இதுதான். ராஜீவ் காந்தியை கொன்றவர்களை எங்களால் எந்த காலத்திலும் மன்னிக்க முடியாது.

அவர்களை புகழ்வது எங்களால்  ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதான் எங்களுடைய நிலையே தவிர,  யார் இருக்கிறார்கள் ? யார் என்ன அறிக்கை விடுகிறார்கள் ? அதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது.LTTEயை ஆதரிச்சு தான் நீங்கள் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அர்த்தமே கிடையாது.

தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு….  எல்லா காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் ஆதரவாகத்தான் இருப்போம். ஆனால் அந்த வேளையிலே LTTE-க்கு LTTE உன்னுடைய கடந்த கால செயலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அர்த்தமே கிடையாது. ADMK பத்து ஆண்டு பாஜகவுடன் இருந்துட்டு,  ஒரே நாளில் வெளியே வந்தால் சிறுபான்மை மக்களுடைய  நம்பிக்கை எல்லாம் பெற முடியாது.

சிறுபான்மை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலே  இருக்கின்ற சிறுபான்மை மக்கள் ரொம்ப தெளிவாக காங்கிரஸ் கட்சி எந்த பக்கம் இருக்கிறதோ, அந்த பக்கம் நின்றால் தான் அவர்களுக்கு நம்பிக்கை வரும். காங்கிரஸ் கட்சி தான் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி இருக்கிறது என தெரிவித்தார்.