தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பலரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதாவிடம் தொலைபேசி மூலம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார்.
முழு விவரங்களை கேட்ட பின், நுரையீரல் பிரச்னை உள்ளதால் விஜயகாந்துக்கு எந்த மருந்துகள் தேவைப்பட்டாலும் அரசு தரப்பிலிருந்து வழங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், அவரின் உடல்நிலை – சிகிச்சை குறித்து அரசுக்கு அப்டேட் கொடுக்க வேண்டும் என மருத்துவர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளாராம்.
