
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார், கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசால் இந்த மக்களுக்கு எதுவுமே நல்லது செய்யவில்லை. எந்த திட்டங்களும் செய்யவில்லை. திட்டங்கள் செய்திருந்தால், அவர்கள் திட்டங்களை சொல்வார்கள். மோடி ஆட்சிக்கு வருவதற்கு கருப்பு பணங்களை வெள்ளை பணமாக்குவேன் என்று சொன்னார். அதை செய்யவில்லை…
வருடத்திற்கு இரண்டு கோடி இளைஞர்களை வேலை வாய்ப்பு தருவேன் என்று சொன்னார். அதையும் செய்யவில்லை…. தலைகீழாக இருக்கின்ற பொருளாதாரத்தை பெரிய அளவிற்கு உயர்த்துவேன் என்று சொன்னார். ஆனால் இன்று பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்திருக்கிறோம்.. மக்களை ஜாதி ரீதியாக… மதரீதியாக…. பிளவு படுத்தி கொண்டு இருக்கிறார்கள்…. பாஜக அரசு 9 ஆண்டு காலமாக படுதோல்வி…. மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கான பலவீழ்ச்சியை பாஜக அரசு அடைந்துள்ளது.
இந்த நாட்டை சீரழித்திருக்கிறது. பஜ நல திட்டங்கள் செய்திருந்தால், அதை சொல்வார்கள். சொல்லுவதற்கு ஒண்ணுமே இல்லை.. அதனால் எப்போதும் போல காங்கிரசையை குறை சொல்லி கொண்டிருப்பது அவர்களின் வேலை ஆகி விட்டது. மக்கள் இதை நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். நடக்க இருக்கின்ற ஐந்து சட்டமன்ற தேர்தலில் அதனுடைய வெளிப்பாடுகள் வரும். 2024இல் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நரேந்திர மோடியை வீட்டிற்கும், தலைவர் ராகுல் காந்தியை நாட்டிற்கும் அனுப்புகின்ற வேலை மக்களே செய்வார்கள் என தெரிவித்தார்.