
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, நான் ஃபர்ஸ்ட் டேயில் இருந்து கேட்டுட்டு இருக்கேன். ஏதாவது உங்க கிட்ட எவிடென்ஸ் இருந்தா ? எங்கேயாவது ஒரு இடத்துல ப்ரொடியூஸ் பண்ணுங்க…. கவர்னர் ஆஃபீஸ்ல வந்து ஒருத்தர் வெடிகுண்டு போடுறாங்க.
அத போட்டு காட்ட தெரிஞ்ச போலீசுக்கு…. சிஎம் டிபார்ட்மெண்டுக்கு…. சி.எம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடைய டிபார்ட்மெண்டுக்கு…. ஏன் என்னுடைய விஷயத்துல உங்களால எதுவுமே காட்ட முடியல ? இது பொய்… நீங்க எங்கள கேள்வி கேக்குறீங்க…. எங்கள பிரஸ் கேக்குறீங்க…. எங்கேயாவது ஒரு இடத்துல போய் உதயநிதி கிட்டயும், முதல்வர் ஸ்டாலின் கிட்டயும் போய் கேக்கணும்.
இது தர்மமா ? இது ஞாயமா ? இப்படித்தான் நீங்க ஆட்சி நடத்துவீங்களா ? என கேட்க வேண்டியது பிரஸ்.. நாங்க எங்க வேலைய பார்க்கிறோம்… அரசியல்வாதி… ஆனால் பிரஸ் நீங்களும் அவங்க கிட்ட போய் கேக்கணும். அவங்க கிட்ட போய் நீங்க என்ன கேக்குறீங்க ? அவங்க சொல்றத கேட்டு நீங்க வந்துருதீங்க.. அவங்களையும், நீங்க கேள்வி கேட்கணும். இது தவறு என்று அத்தனை பேருக்கும் தெரியும் என தெரிவித்தார்.