தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக மாற பல்கலைகள் அனுமதி கொடுப்பதற்கு முன்பு அரசிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்பாக அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், தனியார் கல்லூரிகள் நிகர் நிலை பல்கலையாக மாறுவதற்கு இணைப்பில் உள்ள பல்கலையில் தடை இல்லா சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கின்றன. பல்கலைகள் தடையில்லா சான்று வழங்குவதற்கு முன்பு தமிழக அரசிடம் உன் அனுமதி பெற விண்ணப்பித்து அதற்கான அரசாணையை பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.