விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”அமைப்பாய்த் திரள்வோம்” கட்டுரை தொகுப்பு,  முழக்கம் பாடல் வெளியீட்டு  நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன், போஸ்டர் கொடுத்திருப்போம். 30 போஸ்டர்….. நூறு போஸ்டர் அப்படியே அவர்கள் வீட்டில் பரணில் போட்டு வச்சிருப்பான். யாரிடைமுமே கொடுத்திருக்க மாட்டான். அதனால தான் நான் இப்ப போஸ்டர் அடிக்கிறதை நிறுத்திட்டேன்

ஒவ்வொரு ஏப்ரல் 14-க்கும்,  டிசம்பர் 6-க்கும் நானே டிசைன் பண்ணி… நானே உட்கார்ந்து முழக்கம் எழுதி….. போஸ்டர அச்சிட்டு, சென்னையில பத்தாயிரம் போஸ்ட் அச்சுட்டு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியா பிரிச்சி, எல்லா பஸ்ல போட்டு விடுவோம்.

ஒவ்வொரு ஏப்ரல் 14-க்கும் ஒரு முழக்கம் வரும்…. ஒவ்வொரு டிசம்பர் 6-க்கும் ஒரு முழக்கம் வரும். எனக்கு  தெரிந்த அடிப்படையில ஒரு சிஸ்டத்துல உட்கார்ந்து…. டிசைன் பண்ணி ஒரு போஸ்டர் ரெடி பண்ணி அனுப்புவோம். பல தோழர்கள் அந்த சுவரொட்டிகளை ஒட்டாமல், வீட்டிலேயே போட்டு இருந்ததை நான் பார்த்தேன். ஆனால் கட்சியில் இருக்கிறார்கள். அதை விட முக்கியமாக மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள்.

இதெல்லாம் எதனால் நிகழ்கிறது ? அதனால் தான் மாவோ சொன்னார், மக்களிடம் சொல்லுங்கள், மக்கள் உமக்கு கற்றுத் தருவார்கள் அப்படின்னு சொன்னார். அங்க போனால் தான் தெரியும். போன பிறகு தான் தெரியும்…  நிறைய நாம கற்றுக்கொள்ள முடியும். நாம நினைச்சுகிட்டு இருப்போம்,  தமிழ் மண்ணில் எழுதி முடிச்சிட்டேன்… எல்லாரும் படித்துவிட்டார்கள்.

ஒரு அஞ்சு, ஆறு பேர் தான் கட்டுரைகள் நான் எழுதற நேரங்களில் படிப்பாங்க. அதற்க்கு உடனே ஒரு எதிர்வினை ஆற்றுவாங்க.  அதுல பால் சிங்கம், சங்கத்தமிழன், வன்னியரசு இந்த மாதிரியான தோழர்கள்…. தலைமையகத்தில் இருக்கக்கூடிய தோழர்கள் வேறு யாரும் விவாதிக்க மாட்டாங்க…… நான் அடிக்கடி அவங்க கிட்ட சொல்லுவேன்….  என்னப்பா இப்படி ஒரு கட்டுரை எழுதுகிறோம்….. கட்டுரை படிக்கக்கூடிய தோழர்கள்… இது எப்படி இருக்கு ? இதுல ஏதாவது சந்தேகம் இருக்குதா ? இத பத்தி விளக்கம் கேக்குறாங்களா ? என பேசினார்.