தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறை சார்ந்த ஓய்வூதியதாரர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து சங்க நிர்வாகிகள் தமிழக அரசிடம் இதற்கு முன்பு நடந்த பேச்சு வார்த்தையின் போது கோரிக்கை விடுத்தனர். அப்போது தீபாவளி பண்டிகைக்கு முன்பு அகலவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 10ஆம் தேதி போக்குவரத்து சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தில் அகலவிலைப்படி உயர்வு வழங்க நிதி துறையிடம் ஒப்புதல் கேட்கப்பட்டதாகவும் நிதித்துறை ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டதால் போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு அமல்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் அகலவிலைப்படி உயர்வு குறித்து பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து போக்குவரத்து துறை சார்ந்த 16 சங்கங்கள் ஒன்றிணைந்து தமிழகத்தில் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அகலவிலைப்படி உயர்வு குறித்த அரசின் நடவடிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.