சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. இவர் குளிர்சாதன பெட்டி வாங்குவதற்காக எழும்பூரில் உள்ள தனியார் வங்கியில் 42 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். எட்டு தவணைகளில் ஆறு தவணைகள் செலுத்திய நிலையில் அடுத்த தவணை கட்ட ஐந்து நாட்கள் தாமதம் ஆகி உள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள் அவருக்கு போன் செய்து தரக்குறைவாக திட்டி உள்ளனர். அவர்கள் பேசிய ஆடியோ ஆதாரங்களுடன் ஆர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.