நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  வந்தவன், போனவன் எல்லாம் அடிக்கிறான். நாம் கையோடும் ,  காலோடும் பிறந்தது போல வாளோடும்,  வேலோடும் பிறந்த இனத்தின் மக்கள் நாம். விழ, விழ எழுவோம் என்ற முழக்கத்தை முன் வைத்ததற்கு காரணமே…..  வீழ்வது என்பது அழுவதற்கு அல்ல,  நாம் எழுவதற்கு…..

விழுந்து கிடப்பது அல்ல தோல்வி என் உடன் பிறந்தார்களே….  விழுந்து கிடப்பது அல்ல தோல்வி,  வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி. நீங்கள் எத்தனையோ போட்டிகளில்… குத்துச்சண்டை போட்டியில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்…. தாக்குதலுக்கு ஆட்பட்டு,  கீழே விழுந்தவனுக்கு பத்து முறை எண்ணுவார்கள். பத்து எண்ணுகிறதுக்கு மேலும் கீழே விழுந்து கிடந்தால் தான் அது தோல்வி என்று அறிவிப்பார்கள். ஆனால் பத்து எண்ணுகிற வரை வாய்ப்பு கொடுப்பார்கள்.

அப்போது நாம் என்ன உணர்ந்து கொள்ள வேண்டும் வீழ்வது   அல்ல தோல்வி,  வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி. ஒரு மனிதன் யானையை விட மெதுவாக விழலாம். மானத்தமிழன்  யானையை விட மெதுவாக விழலாம். ஆனால் எழும்போது குதிரையை விட வேகமாக எழ வேண்டும், இதுதான் என்னிலும் இளைய என் தம்பி,  தங்கைகள் உள்ளத்தில் பதிய வேண்டும்.

தோல்வி என்பது தோல்வி அல்ல என் உடன் பிறந்தார்களே…. தோல்வி என்பதை வெற்றியின் தாய். நாம் தோற்றுப் போய் விட்டோம் என்று பொருள் அல்ல.  நீ வெற்றியை துரத்திக் கொண்டிருக்கிறோம் என்று பொருள்….  தோல்வி சொல்லுகிறது என் தம்பி தங்கைகளே…. தோல்வி சொல்லுகிறது என்னை தொட்டு விட்டு போனவன்,  தோற்றதாக வரலாற்றில் செய்தி இல்லை என்கிறது… எளிதில் வென்றவனுக்கு வெற்றியின் அருமை தெரியாது.

எளிதில் வென்றவனுக்கு வெற்றியின் அருமை தெரியாது. எளிதில் வென்றவனின் இதயம் மலரினும் மெலிதாக இருக்கும். ஆனால் தோற்று தோற்று தோற்று வென்றவனுக்கு இதயம் இரும்பை விட கடினமாக இருக்கும் என்கின்றான்…. வெற்றி எப்பொழுதும் நம்மளை சிரித்து மகிழ வைக்கும். தோல்வி நம்மளை சிந்தித்து வெல்ல வைக்கும். வரலாற்றில் எங்கு நாம் வாழ்ந்தோம், எங்கு நாம் வீழ்ந்தோம் என்பதை கற்காமல்….

நிகழ்காலத்தில் வாழ முடியாது என் உடன் பிறந்தார்களே…. வாழ முடியாது. விழிப்பதற்காகத்தான் உறக்கம்….. எழுவதற்காகவே வீழ்ச்சி… நீ அறிவியலை பார், மேலிருந்து கீழே விழும். ஆனால் எவ்வளவு வேகமாக எழுந்தருளும் என்பதை போய் நீ பார்… அப்ப விழிப்பதற்காகவே உறக்கம், எழுவதற்காகவே வீழ்ச்சி, வெல்வதற்காகவே தோல்வி என பேசினார்.