
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் நேரத்தில் மூளைக்கு மூளை பேசினார்கள்…. திரு ஸ்டானிலும் பேசினார், திரு உதயநிதி ஸ்டாலினும் பேசினார்…. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து உடனே அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை சொன்னார்கள். சொன்னார்களா இல்லையா ? பத்திரிகையாளர்கள் சொல்ல மாட்டேங்குறீங்க ? நீங்க தெளிவா போடணும்…
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும்….. தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும்… மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் என்று அறிவித்தது திமுக. தேர்தல் அறிக்கையில் தெளிவாக இருக்கிறது. எல்லா இடத்திலும் திரு ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும்… அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள திமுகவினுடைய முக்கிய தலைவர்கள் எல்லாம் பேசினார்கள்.
ஆட்சிக்கு வந்த உடனே அதற்கு தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டு, அவர்களுக்கு தான் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை மகளிருக்கு வழங்கும் என்று அறிவிப்பு. எப்படி ஏமாற்று வேலை ? நீட் தேர்வு மூலைமுடுக்கெல்லாம் பேசினார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும். திரு. ஸ்டாலினும் சொன்னார், திரு உதயநிதி ஸ்டாலினும் சொன்னார்… ஊடகத்தில் எல்லாம் திருப்பித் திருப்பி காட்டினீர்கள்.
திரும்பவும் காட்டுங்க, ஞாபகம் வரட்டும்.ஆட்சி பொறுப்புக்கு இரண்டரை ஆண்டு காலம் ஆகுது. நாங்கள் என்ன செய்தோமோ , அதுதான் செய்து இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்கள். அதை நாங்களும் செஞ்சோம். உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்து விட்டார்கள். இது இன்னொன்று மாதிரி பேசுகிறார்…
திரு உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்… ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி நடந்ததோ, மாதிரி போராட்டம் நடைபெறும் என்று சொன்னார். ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது மாநில பிரச்சனை. இது தேசிய பிரச்சனை. நீட் தேர்வு என்பது தேசிய அளவில் இருக்கிறது. ஒரு மாநிலத்தில் நடக்கின்ற பிரச்சனை அல்ல. தேசிய அளவில் இருக்கிறது என தெரிவித்தார்.