செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அத்திக்கடவு அவிநாசி திட்டம் அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு,  முழுக்க முழுக்க மாநில நிதியில் கொண்டு வரப்பட்ட திட்டம். சில பேர் மத்திய அரசாங்கத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்… மத்திய அரசாங்க நிதி  வந்தது.

மத்திய அரசாங்கம் அனுமதி கொடுத்தார்கள்…  அது எல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க மாநில அரசாங்கத்தினுடைய நிதி..  இதற்க்கு மத்திய அரசாங்க அனுமதியே தேவை  இல்லை. மாநில அரசாங்கத்தினுடைய நிதியிலிருந்து தான் அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த திட்டம் 90 சதவீதம் முடிந்திருக்கிறது.

ரெண்டரை ஆண்டு காலமாக இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டது இன்றைய விடியா திமுக அரசு,  இன்னும் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றப்பட்டிருந்தால் பல ஏரிகள் நிரப்பப்பட்டு, நிலத்தடி நீர் உயர்ந்து…  வேளாண் பெரு மக்களுக்கு தேவையான நீர் கிடைத்திருக்கும்….. குடிப்பதற்கு  தேவையான நீர் கிடைத்திருக்கும். அதுமட்டுமல்ல சேலம் மாவட்டத்தில் நான்கு தொகுதி பயன்பெறும் விதமாக வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்புகின்ற திட்டத்தை அண்ணா திமுக ஆட்சியில் சுமார் 568 கோடி ரூபாயில் திட்டத்தை துவக்கி, முதல் கட்டமாக ஒரு ஆறு ஏரிகள் நீர் நிரப்புகின்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டே நான் துவக்கி வைத்தேன்  தெரிவித்தார்.