
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாங்க சமத்துவம் தான் பேசுவோம். சம நல்லிணக்கம் தான் பேசுவோம், எங்களுக்கு இந்தியா கூட்டணியில்…. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவங்களை ஒருங்கிணைப்பாளராக மாற்றினால் தான் எங்களுடைய ஆதரவு அப்படின்னு உங்களால் சொல்ல முடியுமா ? சொல்ல முடியாது.
உதயநிதி ஸ்டாலின் உடைய பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகளே கண்டனம் தெரிவிச்சி இருக்கு. அந்த மாதிரி பேச கூடாதுனு…. இன்னைக்கு ஒரு மதத்தை சொல்லுவாங்க, நாளைக்கு இஸ்லாமியர் சொல்லுவாங்க, கிறிஸ்டின் சொல்லுவாங்க. அதே மாதிரி எந்த மதமாக இருந்தாலும் அது மதிக்க படனும்.
2021தேர்தல்ல மட்டும் DMK வரலைன்னா.. தலைவர் DMKவை 13 வருஷம் வனவாசம் அனுப்பிச்சாரு. அம்மா 10 வருடம் அனுப்பிச்சாங்க. 2021ல நாங்க ஆட்சிக்கு வந்திருந்தா…. Permanentடா வனவாசம் தான் திமுகவுக்கு… அதுனால ஜஸ்ட் மிஸ் ஆகிட்டாங்க. ஆனால் இந்த தடவ வனவாசம், வனவாசம் தான் என தெரிவித்தார்.