திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, தர்மபுரியில் மீட்டிங் பேசிகிட்டு இருக்கேன். வாட்ஸ் அப்ல லியோனி அகால மரணம் அடைந்தார் அப்படினு எனக்கு மாலை போட்டு, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்  போட்டாங்க அதிமுககாரங்க. நான் மேடையில பேசிட்டு இருக்கேன் என்கிட்ட கொண்டு வந்து காட்டுறாங்க..  எனக்கு மாலை போட்ட போஸ்டரை…  உடனே இங்க இருந்த சகோதரிகள் கிட்டலாம்  காமிச்சேன். அதிமுககாரர்கள் எப்படிப்பட்ட கோழைகள் ? அப்படிங்கறது இதுதான் எடுத்துகாட்டு.

உயிரோடு இருக்கிறவனை சாகடிச்சாங்க. என் தானைத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களையும், இதுபோல பலமுறை அவர்கள் சோசியல் மீடியாவில் சாகடித்தார்கள். அதையும் மீறி 94 வயது வரை வாழ்ந்து….  இந்த நாட்டில் புரட்சியை ஏற்படுத்திய தலைவர் தான் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். அதுக்கு அப்புறம் நிறைய பேர் எனக்கு போன் போட்டு, கெட்ட கெட்ட வார்த்தையா பேசுறான் அவன்பாட்டுக்கு…

என் வீட்டுக்கார அம்மாட்ட பேசுறான், என் மகன் கிட்ட பேசுறான்…  நேருக்கு நேர் அவர்களால் சந்திக்க முடியவில்லை. இன்னைக்கு நான் அந்த மேடையில் சவால் விட்டு சொல்றேன்…. எதித்தாப்புல ஒரு அதிமுககாரர் யாரா இருந்தாலும் சரி, அது முன்னால் அமைச்சர் ஜெயக்குமாராக இருந்தாலும் சரி…. எனக்கு நேரா மேடை போட்டு…  கலைஞருடைய சாதனையை நான் சொல்றேன், 

 ஜெயலலிதா அம்மாவுடைய சாதனையை நீ சொல்லு.. யாருக்கு அதிக கைதட்டு கிடைக்குது? யாருக்கு அதிக வரவேற்பு இருக்குது ? இன்னைக்கு சவால் விட தயாரா? அம்மாவின் ஆட்சி… அம்மாவின் ஆட்சி… அம்மாவின் ஆட்சின்னு பேசினாரே,   எடப்பாடி பழனிச்சாமி….  அந்த அம்மாவுக்கு நீங்க என்னையா செஞ்சீங்க? என கேள்வி எழுப்பினார்.