ஆஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ் லேண்ட் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மொட்டை மாடியில் இருந்து ராட்சச மலைப்பாம்பு ஒன்று மரம் விட்டு மரம் தாவும் காட்சி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பொதுவாகவே பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டு இருப்பதால் இதனைப் பார்த்தால் மக்கள் அனைவரும் பீதி அடைவார்கள்.
இங்கு 16 அடி ராட்சத மலைப்பாம்பு ஒன்று மொட்டை மாடியில் இருந்து அருகில் உள்ள உயர்ந்த மரக்கிளைக்கு சென்றுள்ளது. அதன் பிறகு அந்த மரத்திலிருந்து அருகில் உள்ள மற்றொரு மரத்திற்கு சென்றுள்ள நிலையில் இதனை பார்த்த ஒருவர் இந்த வீடியோவை எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
thought this was an anaconda but nope just a carpet snake in australia 🤯 pic.twitter.com/4bUL33y1Hl
— 6mile (@_Weebey) August 29, 2023
