பொதுவாகவே அனைத்து நாடுகளிலும் போக்குவரத்திற்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதனை மீறும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாலை விளக்குகள் சாலையை கடக்கும் வாகனங்கள் கட்டாயமாக மூன்று நிற விளக்குகளையும் அதன் விதிகளையும் பின்பற்ற வேண்டும். இந்த விளக்குகள் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் இருப்பதை அனைவரும் கவனித்திருப்போம். ஆனால் இந்த மூன்று வண்ணங்களில் இருப்பதற்கான காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

முதலில் அமெரிக்காவில் தான் இந்த போக்குவரத்து சிக்னல் கடைபிடிக்கப்பட்டது. சிவப்பு நிறம் மற்ற வண்ணங்களை காட்டிலும் மிகவும் அடர்த்தியானது. அதனால்தான் தொலைவில் இருந்து நாம் சிவப்பு நிறத்தை எளிதில் காண முடிகிறது . அதே சமயம் ஆபத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் விதமாக சிவப்பு இருப்பதால் நிறுத்தம் என்று பொருள் கொண்டும் சிவப்பு நிற விளக்கு பொருத்தப்பட்டது. அடுத்ததாக பச்சை சிவப்பு நிறத்திற்கு எதிர்மறையாக இருப்பதால் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு பச்சை நிறம் தேர்வு செய்யப்பட்டது. அடுத்தது வாகனங்களை பயணத்திற்கு தயார்படுத்தி  எச்சரிக்கையும் செய்யலாம் என்பதை கூறும் வகையில் மஞ்சள் நிறம் தேர்வு செய்யப்பட்டது.