திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கரக்குளம் சுலோச்சனை முதலியார் பாலத்தின் கீழ் தாமிரபரணி ஆறு செல்கிறது. நேற்று மாலை ஆற்றல் குழந்தையின் உடல் மிதந்து வந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டது பிறந்து இரண்டு நாட்களில் ஆன பெண் குழந்தை என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை ஆற்றில் வீசி சென்ற நபர்கள் யார்? குழந்தை எப்படி இறந்தது? என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் மிதந்து வந்த குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
காரில் சைரன்… கையில் மைக்! போலி போலீஸாக ரோட்டில் அலப்பறை செய்த வாலிபர்! அப்புறம் நடந்ததை ‘ரீல்ஸ்’ ஆக போட வைத்த கன்னியாகுமரி போலீஸ்..!!
இன்றைய நவீன உலகம் சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ (Likes) மற்றும் ‘வியூஸ்’ (Views) பெற வேண்டும் என்பதற்காக எல்லைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சில நொடிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சட்டத்தையும், காவல்துறையின் கௌரவத்தையும் கூடக் கேலிப்பொருளாக்கத் துணியும் இளைஞர்களின் எண்ணிக்கை…
Read moreBreaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… மாற்றுத்திறனாளி சபரி வர்மன் வழக்கை சிபிசிஐடி மாற்றி அதிரடி உத்தரவு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையை CBCID பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…
Read more