முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறிய கருத்துக்களுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை அரசியல் அறிவு இல்லாமல் ஜெயலலிதா பற்றி கூறி வருகிறார். இது அவரது அறியாமையையும் அனுபவம் இல்லாத தன்மையையும் காட்டுகின்றது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஊழல் குற்றத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள் என அண்ணாமலை கூறி இருந்தார். இவரின் இந்த கருத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக குறிப்பிடுவது போல இருக்கிறது என கூறி அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
