இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டும் அவ மரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில் மொழி விவகாரத்தில் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறோம் என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் டுவிட் செய்துள்ளது.

முன்னதாக பிராந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் பணி சூழல் மீதே நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அலுவல் பணிகளை இந்தி மொழியில் மேற்கொள்ள வேண்டும் என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. பின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சுற்றறிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மொழி விவகாரத்தில் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் டுவிட் செய்துள்ளது.