சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரம் மைதிலி கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் மைதிலியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த மைதிலியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மைதிலியை கத்தியால் குத்தியது கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மது போதையில் இருந்த தங்கராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடை முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“14 கி.மீ நடந்தாலும் உடல் வலி பறந்து போகும்….!” திருவண்ணாமலையில் இருக்கும் அதிசய இடுக்கு பிள்ளையார்…. உடல் ஆரோக்கியமும் ஆன்மீகமும் பாதுகாப்பு எச்சரிக்கை….!!
திருவண்ணாமலை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அண்ணாமலையாரும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையும்தான். தொடர்ந்து இரண்டு முறை மாடிப்படி ஏறி இறங்கினாலே உடல் உழைப்பும் சோர்வும் அதிகரிக்கும் நிலையில், நீண்ட தூரம் நடக்கும் கிரிவலப் பாதையில் பக்தர்களின் உடல் சோர்வைப்…
Read more“அடேங்கப்பா! இவ்வளவு பெரிய ராட்சத பேனரா?”.. ஜனநாயகன் பட விளம்பரத்தால் ஏற்பட்ட திடீர் விபத்து… சோழவந்தானில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான விளம்பரப் பேனர் ஒன்று எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது. இந்த திடீர் விபத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பும்…
Read more