இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை ஆனது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மக்கள் பலர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் கார்களையும் அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்ட நிலையில் இந்தியாவில் 7,432 பப்ளிக் பாஸ்ட் சார்ஜிங் EV ஸ்டேஷன்களை அமைக்க 3 PSU ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கனரகத் தொழில் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கும் 560 கோடி அல்லது மொத்த தொகையில் 7% நிதியை முதல் தவணையாக வழங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் ரீடைல் அவுட்லெட்களில் EV பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை இன்ஸ்டால் செய்ய அவற்றின் உள்கட்டமைப்பை செயல்படுத்த மற்றும் சார்ஜிங் உபகரணங்களை நிறுவுவதற்கு ஏதுவாக முதல் தவணை நிதி விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
