இந்தியாவில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால் மக்கள் திரவ உணவுப் பொருட்களை அதிகம் வாங்கி உண்பதால் இதனுடைய விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது பதநீர், சர்பத், பழரசம், இளநீர், கம்மங்கூழ், மோர் குளிர்பானம், ஐஸ்கிரீம் உள்ளிட்ட திரவ பொருட்கள் வெப்பத்தினை தாக்க த்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சிறந்த உணவு பொருட்கள் ஆகும். இந்நிலையில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது திரவ ஆகாரங்களை சரியான வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும். பானங்களை தயார் செய்ய பயன்படுத்தும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும். முதலில் வணிகர்கள் என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும். விற்கப்படும் திரவ ஆகாரங்களை ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்காமல் மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும். கடைகளில் சுகாதாரக் குறைபாடு ஏதேனும் இருந்தால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.