சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.