பல தமிழ் திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மைம் கோபி. இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அப்போது தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளையும் பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் தனது மனைவி ஒரு மருத்துவர் என கூறியிருக்கின்றார். அவர் அமெரிக்காவில் படித்ததாகவும் தான் பொது சேவை செய்வதால் அதைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகி தன்னை காதலித்ததாகவும் தெரிவித்துள்ளார். எங்கள் காதலுக்கு அவர் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களை எதிர்த்து திருமணம் செய்யவும் மனமில்லை.இதன்பின் ஐந்து வருட போராட்டத்திற்கு பிறகு காத்திருந்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.