தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்த பொம்மை நாயகி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் காமெடி ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் யோகி பாபு 35 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.