சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்களிடையே பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இதன்பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் நீண்ட நாள் காதலியான ஜெஸ்ஸியை பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று மனைவி கர்ப்பமாக இருப்பதை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சென்ற பிப்ரவரி 12ஆம் தேதி இத்தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கின்றது. இந்த செய்தியை தற்போது தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றார் அஜய் கிருஷ்ணா. இவருக்கு தற்போது மானசி, லக்ஷ்மி பிரதீப் என அவர்களின் நண்பர்களும் பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.