தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சென்ற 2021 ஆம் வருடம் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தெலுங்கு திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி 350 கோடி வரை வசூல் செய்தது. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் சார்பாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று பதிவிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரசிகரின் தந்தை ஒருவருக்கு நுரையீரல் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இது அல்லு அர்ஜுன் கவனத்திற்குச் சென்று ரசிகரின் நிலையை அறிந்து தனது குழுவினர் மூலம் உதவி செய்திருக்கின்றார். இதனை ரசிகர் மன்றம் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கின்றது. இதற்கு ரசிகர்கள் பலரும் அல்லு அர்ஜுனனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.