தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் மீது சென்ற 2021 ஆம் ஆண்டு மகா காந்தி என்பவர் தன்னை பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தாக்கியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தான் சென்ற நவம்பர் இரண்டாம் தேதி மருத்துவப் பறிசோதனைக்காக மைசூர் சென்ற போது விமான நிலையத்தில் விஜய் சேதுபதி சந்தித்தேன்.

அப்போது அவரை பாராட்டி கைகுலுக்கிய போது அதை ஏற்க மறுத்து தன்னை இழிவு படுத்தியதாகவும் தாக்கியதாகவும் தெரிவித்திருக்கின்றார். மேலும் அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்‌. இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றம் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியது. இதன் இடையே விஜய் சேதுபதி தரப்பில் வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டார்கள்.

மேலும் அவதூறு வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்கும் போது நடிகரான மனுதாரர் தெரிவித்த கருத்துக்கள் பொதுவெளியில் கவனத்தை பெறுகின்றது என்றும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் கட்டுப்பாட்டுடன் நடந்திருக்க வேண்டும் என்றும் பொறுப்புள்ள நபராக யாரையும் அவதூறாக பேசியிருக்கக் கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண அறிவுறுத்தி இருக்கின்றார். வருகின்ற மார்ச் 2-ம் தேதி இருதரப்பினரும் ஆஜராகவும் உத்தரவிட்டிருக்கின்றார்.