மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலத்தில் ஈடுபட்டார்கள்.

மத்திய அரசை கண்டித்து தேனியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக டிராக்டர் ஊர்வலம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மை கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் முன்பாக விவசாயிகள் கையில் தேசிய கொடியுடன் திரண்டார்கள். ட்ராக்டர் கொண்டு வர போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு இரண்டு டிராக்டர் மட்டும் கொண்டு வரப்பட்டு மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்க பல அமைப்பின் செயலாளர்கள் பலர் பங்கேற்று பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் சிறு, குறு நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன் பின் இரண்டு டிராக்டர்கள் மற்றும் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் ஊர்வலமாக சென்றது.