திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 113 பேருக்கு 1 கோடியே 91 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தின் நிர்வாகம் சார்பாக குடியரசு தின விழா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதன்பின் அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மூன்று பேருக்கு பேட்டரி வீல் சேர்கள், வருவாய் துறை சார்பாக 10 பேருக்கு விதவை உதவித்தொகை, 23 பேருக்கு இ-பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 பேருக்கு இயற்கை மரணத்தொகை, 7 பேருக்கு கல்வி உதவித்தொகை, மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக 11 பேருக்கு கல்வி கடன் உதவி, கூட்டுறவு நல சங்கங்கள் சார்பாக 6 பேருக்கு கடனுதவி, வேளாண்மை பொறியியல் துறை சார்பாக வேளாண் கருவி, சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 22 பேருக்கு தையல் இயந்திரங்கள் என மொத்தமாக 113 பேருக்கு 1 கோடியே 91 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.