தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் 96 படம் வாயிலாக அறிமுகமானவர் தான் கவுரி கிஷன். இதையடுத்து தளபதி விஜய்யுடன் மாஸ்டர், தனுஷின் கர்ணன் மற்றும் பிகினிங் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் கவுரி பேட்டி அளித்தபோது “எனக்கு தொடக்கத்தில் நடிகையாக வேண்டும் என்ற எண்ணமே இல்லை. 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது 96 ஆடிசனுக்கு சென்று தேர்வாகிவிட்டேன்.

அதன்பின் நடிகையாக நல்ல பெயர் வாங்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் உருவாகிவிட்டது. திரைத் துறையில் பெண் எழுத்தாளர்கள் குறைவாக இருக்கின்றனர். இதனால் அதிகம் பெண் எழுத்தாளர்கள் வர வேண்டும். அப்போது தான் பெண் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் அதிகம் உருவாகும். நான் கூட எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்”என்று அவர் கூறியுள்ளார்.