ஷாரூக்கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் வைத்து கொண்டாடி வருகின்றார்கள்.

உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். அண்மையில் இத்திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது முன்பதிவில் மாஸ் காட்டி வருகின்றது. வருகின்ற 25ஆம் தேதி தியேட்டரில் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் திரைப்படத்தின் முன்பதிவு ஆரம்பமாகி அமோக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள  சென்னையில் இருக்கும் உட்லேண்ட்ஸ் திரையரங்குக்கு வெளியே ஷாருக்கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் வைத்து கொண்டாடி வருகின்றார்கள்.