விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற இறுதியாக கதிரவன் பணப்பெட்டி டாஸ்க் 3 லட்சத்தை எடுத்துச் சென்றார். அவரைத் தொடர்ந்து அமுதவாணன் 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில் இறுதியில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேரும் பைனல் சென்றனர். அதில் அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றதோடு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேசப்பட்டு 15 நாட்களுக்கு 25 லட்சம் வாங்கியுள்ளார். சிவினுக்கும் இதே சம்பளம் தான் வழங்கப்பட்டுள்ளது. விக்ரமன் ஒரு நாளைக்கு 18000 என 15 நாட்களுக்கு 18 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார்.