தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அசீம் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜேவாக தனது மீடியா பயணத்தை தொடங்கினார். தன்னுடைய பேச்சுத் திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை வென்ற இவரை தேடி சின்னத்திரை வாய்ப்புகள் வந்தது. அதன்படி பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் சீரியலில் என்றைக் கொடுத்த இவர் அடுத்ததாக பிரியமானவள் சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தெய்வம் தந்த வீடு மற்றும் பகல் நிலவு ஆகிய சீரியல்களில் நடித்த இவருக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த நிலையில் அவரது தாயின் உடல் நிலையை கருதி நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் நன்றாக விளையாடி இறுதியாக டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி தூக்கினார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் ட்ராப்பியுடன் பதிவிட்டுள்ள அவர், பதினோரு நாமினேஷன், 1 டிராபி என்றபடி முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்த பலரும் இதற்கு தகுதியானவர்தான் என்று கமெண்டு செய்து வந்தாலும் ஒரு சிலர் இது ஓவரா தெரியலையா என்று திட்டியும் வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

MOHAMED AZEEM இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actor_azeem)