விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற 24-ஆம் தேதி ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம் நடைபெறுகின்றது.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம் வருகின்ற 24-ஆம் தேதி தொடங்குகின்றது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, விருதுநகர் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வருகின்ற 24 மற்றும் 25ஆம் தேதிகளில் ஆட்சி மொழி பயிலரங்கம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற இருக்கின்றது.

மேலும் மாவட்ட ஆட்சியர் இதனை தொடங்கி வைக்கின்றார். இதன் பின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் திட்ட செயலாக்கம் பற்றி சிறப்பு உரையாற்ற உள்ளார். இந்த கருத்தரங்கில் தமிழறிஞர்கள், உயர் அரசு அலுவலர்கள், மொழி வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தமிழின் தொன்மை ஆட்சி மொழிக்கான தகுதி, மொழி வரலாறு, தமிழில் எழுதுதல் குறிப்புகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் உள்ளிட்ட பலவற்றை பற்றி கருத்துறை வழங்க இருக்கின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.