அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்னூர் புது தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி ஓட்டுனரான பிரிட்டோ என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் பிரிட்டோ லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டி மெயின் ரோடு பகுதியில் சென்றபோது தாமரைகனி, கோபு ஆகிய இருவரும் லாரியை வழிமறித்தனர்.
இதனையடுத்து அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பிரிட்டோவிடம் பொங்கல் பண்டிகைக்கு பணம் கொடுத்துவிட்டு போ எனக் கூறியுள்ளனர். இதுகுறித்து பிரிட்டோ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தாமரைக்கனி, கோபு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.