கடலூர் மாவட்டத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன் தலைமையிலான போக்குவரத்து துறை அதிகாரிகள் ஜவான் பவன் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக அடுத்தடுத்து வந்த டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது 5 டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமாக ஜல்லி மற்றும் எம்.சாண்ட் மணல் லோடு ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் லாரிகளுக்கு மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் அதிகமான பயணிகளை ஆட்டோவில் ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ டிரைவர்களையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.