துணிவு பட வில்லன் அஜித்தின் ரசிகர் என தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்ற ஜனவரி 11ஆம் தேதி துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் ஜான் கொக்கேன். இவர் தான் அஜித்தின் ரசிகன் என வெளிப்படையாக தெரிவித்து இருக்கின்றார்.

இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அதற்கு முன்பாக அஜித் நடித்த வீரம் திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இதற்கு அவர் கனவு நனவானது. எப்போதும் எப்போதும் பெருமைமிகு அஜித் ரசிகன் என பதிவிட்டு இருக்கின்றார்.