பொய்யான செய்திக்கு துணிவு பட விநியோகஸ்தர் பதிலடி தந்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்ற 11ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இரண்டு திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் ட்விட்டரில் இரண்டாம் நாளில் வாரிசு திரைப்படம் தான் அதிகம் வசூல் செய்ததாக பல ட்விட் போட்டார்கள்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் துணிவு திரைப்படத்தின் விநியோகஸ்தர் ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பதிலடி தரும் வகையில் கமெண்ட் செய்திருக்கின்றார். தம்பி உருட்டு உருட்டு உருட்டு, ப்ரோ இருவரை தவிர வேற யாருக்கும் தெரியாது, சியர்ஸ் ப்ரோ, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், ஹாப்பி துணிவு பொங்கல், துணிவுடன் நேரில் வந்து துணிவு கலெக்ஷன் பத்தி தெரிஞ்சிக்கவும், பிரதர் உங்களுக்கு உண்மை தெரியும் என நினைக்கிறேன், ஹாப்பி துணிவு பொங்கல் ப்ரோ என பலவகையில் பதிலடி கொடுத்திருக்கின்றார்.

வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் இருவருக்கும் மட்டும் தான் அவற்றின் உண்மையான வசூல் நிலவரம் என்னவென்று தெரியும். அப்படி இருக்க மற்றவர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு பொய்யான தகவல்களை பரப்புவதாக ஹாலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். இதனிடையே துணிவு படக்குழு ரியல் வின்னர் எனவும் வாரிசு படக்குழு பொங்கல் வின்னர் எனவும் போட்டியாக போஸ்டர்களை வெளியிட்டிருக்கின்றார்கள்.