“செலிப்ரேஷன் ஆப் வாரிசு” வீடியோ வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்ற 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் ரிலீசானது.

இத்திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடு திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கின்றது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகிருக்கின்றது. அதன்படி இத்திரைப்படத்தின் செலிப்ரேஷன் ஆப் வாரிசு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.