பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழில் இரண்டு திரைப்படங்களும் தெலுங்கில் மூன்று திரைப்படங்களும் ரிலீஸ் ஆகி உள்ளது. விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு திரைப்படங்களும் தெலுங்கில் பாலகிருஷ்ணன் நடித்த வீரசிம்ஹா ரெட்டி, சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, சந்தோஷ் சோபன்-பிரியா பவானி சங்கர் நடித்த கல்யாணம் கமனீயம் உள்ளிட்ட திரைப்படங்களும் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. இத்திரைப்படங்கள் கர்நாடகாவில் பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இடையே போட்டி நிலவி வருகின்றது. இருந்தாலும் தெலுங்கு திரைப்படங்களை விட தமிழ் திரைப்படம் படங்கள் அதிக வசூலை குவிக்கின்றது. முதல் நாளில் வாரிசு திரைப்படம் முதல் இடத்திலும் துணிவு திரைப்படம் இரண்டாம் இடத்திலும் வீரசிம்ஹா ரெட்டி மூன்றாம் இடத்தையும் வால்டர் வீரய்யா திரைப்படம் நான்காம் இடத்தையும் பிடித்தது.

வாரிசு திரைப்படம் சென்ற மூன்று நாட்களில் ஏழு கோடி வரையிலும் துணிவு திரைப்படம் 6.75 கோடி வரையிலும் வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. மேலும் துணிவு திரைப்படம் இன்று தனது லாபக் கணக்கை ஆரம்பித்து விடும் என தெரிவிக்கின்றார்கள். வாரிசு திரைப்படத்தின் லாப கணக்கு நாளை முதல் ஆரம்பமாக வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். மொத்தத்தில் கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் இரண்டுமே வசூலை அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.