ஹாலிவுட் பிரபல இயக்குனரை ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி சந்தித்துள்ளனர்.

ஹாலிவுட் சினிமா உலகின் உச்ச இயக்குனரில் ஒருவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இவர் பல திரைப்படங்களை இயக்கி சூப்பர் ஹிட் திரைப்படங்களாக கொடுத்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கின்றார். இந்த நிலையில் இவரை தெலுங்கு திரைப்படஇயக்குனர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி சந்தித்துள்ளார்கள். அப்போது எடுத்த புகைப்படங்களை ஆர் ஆர் ஆர் பட குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.

ஸ்பீல் பெர்க்கை பார்த்து இயக்குனர் ராஜமவுலி ஆச்சரியத்துடன் கன்னத்தில் கை வைத்திருக்கின்றார். மேலும் நான் இப்போது கடவுளை பார்த்தேன் என குறிப்பிட்டு இருக்கின்றார். இசையமைப்பாளர் கீரவாணி, திரைப்படங்களின் கடவுளை சந்திக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாகவும் அவருடைய காதுகளில் அவரின் திரைப்படங்கள் பிடிக்கும், அவற்றில் டூயல் மிகவும் பிடிக்கும் என தெரிவித்ததாக கூறினார். மேலும் நாட்டு நாட்டு பாடல் பிடிக்கும் என்று அவர் சொன்ன போது என்னால் அதை நம்ப முடியவில்லை என இணையத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.