காந்தாரா ரிஷப் செட்டிக்கு கமல்ஹாசன் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
ரிஷப் செட்டி அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் காந்தாரா. சென்ற வருடம் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் டூப் ஹிட்டானது. இதன் வெற்றியை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் ரிஷப் செட்டிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதை ரிஷப் செட்டி பகிர்ந்து இந்திய சினிமாவின் ஜாம்பவானிடம் இருந்து இப்படி ஒரு அன்பான மெசேஜ் கிடைக்க பெற்றதற்கு நிறைய அர்த்தம் இருக்கின்றது.
கமல் சாரிடம் இருந்து இப்படி ஒரு எதிர்பாரா பரிசை பெற்றது மிகவும் பிரமிப்பாகவும் திகைப்பாகவும் இருக்கின்றது. இப்படி ஒரு மதிப்பான பரிசை தந்ததற்கு நன்றிகள் சார் என குறிப்பிட்டு இருக்கின்றார். முன்னதாக படம் வெளியான பிறகு ரிஷப் ஷெட்டி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனின் ரிஷப் செட்டியை பாராட்டி இருக்கின்றார். காந்தாரா திரைப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.